காதலி இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபுகாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் பிரபுகாந்த் அந்த விடுதி அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக பிரபுகாந்த் வாட்ஸ் அப்பில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் காவல்துறையினர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி பிரபுகாந்த் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற காவல்துறையினர் சென்று அறைக்கதவை திறந்து பார்த்தனர்.
அங்கு பிரபுகாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பிரபுகாந்தை உடனடியாக மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரபுகாந்த் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அந்த பெண் கடந்த மாதம் இறந்து விட்டதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் பிரபுகாந்த் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வந்ததும், அதன் பிறகு அவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.