மது குடிக்க பணம் தர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராணிமகாராஜபுரம் பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இதில் மகன் 3-வது மகனான கிருஷ்ணபெருமாளுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சென்னையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணபெருமாள் ஊருக்கு வந்திருந்தார். அப்போது கிருஷ்ணபெருமாள் தனது தாயாரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். இதனால் அவரது தாய் ரூ.500 பணம் கொடுத்துள்ளார். அதன்பின் கிருஷ்ணபெருமாள் மாலையில் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு தாயார் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணபெருமாள் வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணபெருமாள் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கிருஷ்ணபெருமான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிருஷ்ணபெருமாளின் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.