Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாங்குளம் மயிலாடும்பாறை காலனி பகுதியில் பிரம்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு ரமேஷின் பெற்றோர்கள் அவரிடம் முதலில் நிரந்தரமாக ஒரு வேலையை பார்த்துக் கொள்ளுமாறும், அதன்பின் திருமணத்தைப் பற்றி பேசலாம் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் ரமேஷ் மனமுடைந்து தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த ரமேஷின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து கல்லிடைக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரமேஷின் சடலத்தை உடனடியாக கைப்பற்றி  திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |