வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சநாதமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சில நாட்களாக காசநோய் இருந்து வந்ததால் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு தீராத வயிற்றுவலியும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பஞ்சநாதமூர்த்தி திடீரென வீட்டில் இருந்து வெளியேறி அருணகிரிமங்கலம் சாலையில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த மருவத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பஞ்சநாதமூர்த்தியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.