Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ராயல் நகர் பகுதியில் ஷேக் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முஜிபுர் ரகுமான் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முஜிபுர் ரகுமான் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு தனது தாயாரான மெகராஜ் நிஷாவிடம் ரூ.2 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு மெகராஜ் நிஷா தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக சுற்றுலா செல்ல வேண்டாம் என முஜிபுர் ரகுமானிடம் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த முஜிபுர் ரகுமான் தனது அறையில் தான் கட்டியிருந்த வேட்டியால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முஜிபுர் ரகுமானின் உடலை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |