Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சுப்புராயலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராமராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சுப்புராயலு தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் தனியாக இருந்த விஜயராமராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விஜயராமராஜின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |