வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லங்காட்டுவலசு பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அதிலிருந்து சீனிவாசன் மீள முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசன் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசனின் உடலை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காங்கேயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.