கடன் தொல்லையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலந்தவிளை பகுதியில் சுடலைமாடன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் சுரேஷ் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் ஒரு திருமண மண்டபத்தின் பின்னால் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுரேஷை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சுரேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.