வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்ககுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்ககுமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக தங்ககுமார் தனியார் மருத்துவமனையில் மருந்து வாங்கி சாப்பிட்டும் சரியாகாமல் இருந்து வந்துள்ளது.
இதனால் மனவேதனை அடைந்த தங்ககுமார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களிடம் “நான் தற்கொலை செய்து இறந்து விடுவேன்” என கூறி வந்துள்ளார். இந்நிலையில் தங்ககுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விளாத்திகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.