Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாலிபரை கண்டித்த குடும்பத்தினர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் மணிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிதாஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்த காளிதாஸ் தனது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் காளிதாசை கண்டித்துள்ளனர்.

இதில் மன வேதனை அடைந்த காளிதாஸ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிதாஸின் உடலை கைப்பற்றி விளாத்திக்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |