Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக திறக்கப்படாத அறையின் கதவு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேடபாளையம் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தின் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் போட்டோகிராபராக பணிபுரிந்து வந்துள்ளார்.   இந்நிலையில் நித்தின்குமார் அறையின் கதவு திறக்கப்படவில்லை. இந்நிலையில் அவரது தாயார் நித்தின்குமாரை அழைக்க சென்ற போது கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியே பார்த்துள்ளார். அப்போது நித்தின்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் கதறி அழுதுள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த நித்தின்குமாரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நித்தின்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |