Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சேதமடைந்த கார்…. மிரட்டிய கார் ஷோரூம் நிர்வாகிகள்…. வாலிபரின் விபரீத முடிவு….!!

கார் ஷோரூம் நிர்வாகிகள் மிரட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் கோவில் பாளையம் பகுதியில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீத் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பண்ணைக்காடு தோட்டம் பகுதியில் உள்ள ஈஸ்வரி காம்பவுண்டில் தங்கியிருந்து குங்குமம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான கார் ஷோரூமில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீத்குமார் ‘டெமோ’ காரை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வரும் போது ஏற்பட்ட விபத்தில் கார் சேதம் அடைந்துள்ளது. இதனால் கார் ஷோரூம் நிர்வாகிகள் சங்கீத் குமாரை கடுமையாகத் திட்டியதுடன் கார் சேதமடைந்ததற்கு பணம் கேட்டு மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து வைத்துக் கொண்டுள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த சங்கீத்குமார் அவரது தந்தைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சொல்லிவிட்டு தான் தங்கியிருந்த வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்கீத்குமாரின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து தந்தை முத்துக்கருப்பன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் நிர்வாகிகளான சின்னாம்பாளையம் பகுதியில் வசிக்கும் பத்மகுமார், கதிரேசன், ஹரிஹரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |