வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோடங்கிபட்டி கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மேலும் வீட்டிலிருந்து அடிக்கடி நாராயணசாமி வெளியில் சென்று விடுவதாகவும் அவரை குடும்பத்தினர் தேடி கண்டுபிடித்து அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற நாராயணசாமி நீண்ட நேரமாகியும் மீண்டும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஊருக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் நாராயணசாமி வேப்பமரத்தில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாசார்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணசாமியின் உடலை கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.