Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“படிப்பிற்கு ஏற்ற வேலை செய்யவேண்டியது தானே” வாலிபரின் விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோவிந்தசாமி நகர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்.சி.ஏ. படித்துள்ளார். தற்போது சதீஷ் ‘ஆக்டிங்’ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தாயார் மகன் சதீஷை படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை செய்ய வேண்டியதுதானே என திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சதீஷ் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |