வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் சூரிய முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தனகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தனகுமார் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. மேலும் சந்தனகுமார் அவரது பெற்றோரிடம் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் சூரிய முத்து சந்தனகுமாரை கண்டித்துள்ளார். இந்நிலையில் சந்தனகுமார் அறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆனதால் அவரது குடும்பத்தினர் பதற்றம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சந்தனகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சந்தனகுமாரை உடனடியாக மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சந்தனகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.