வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் சேர்மதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் மானாடு கிராமத்தில் உள்ள ஒரு பனங்காட்டில் பனை ஏறும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் பகலில் மானாடு பனங்காட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பெரியமுத்துவின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அவருடைய தந்தை பனங்காட்டிற்கு சென்று பெரியமுத்துவை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே பெரியமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.