வாலிபரை சரமாரியாக வெட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் வீரபுத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரபுத்திரன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது வீரபுத்திரனை அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வீரபுத்திரனை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த மர்ம நபர்கள் அதே பகுதியில் வசிக்கும் சங்கரபாண்டி, சின்னதுரை மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் என்பதும் இவர்கள் 3 பேரும் சேர்ந்து காதல் விவகாரத்தில் வீரபுத்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சங்கரபாண்டி உள்பட 3 பேரையும் கைது செய்துள்ளனர்.