வாலிபரை பிளேடால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆமின்புரம் பகுதியில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லோடு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு பகுதியில் வசிக்கும் தொழிலாளியான ராஜேந்திரன் என்பவரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் 2 பேரும் மேலப்பாளையம் பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் சதாம் உசேனை பிளேடால் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த சதாம் உசேன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்தனர்.