வாலிபரை கத்தியால் குத்தியவர் மீது காவல்துறையனர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் கடா காஜா, ரம்ஜான் கனி என்பவர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் மேலப்பாளையம் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரம்ஜான் கனி, கடா காஜாவை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த கடா காஜா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடா காஜா மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரம்ஜான் கனியின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.