வாலிபரை கத்தியை காட்டி மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எட்டையபுரம் சாலையில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் கத்தியை காட்டி அந்த வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சோட்டையன்தோப்பு பகுதியில் வசிக்கும் பார்த்திபன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பார்த்திபனை கைது செய்ததோடு அவரிடமிருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.