வாலிபரை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோத் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக முத்தூர்-வெள்ளகோவில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் மற்றும் மற்றொருவர் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் வினோத்தை தாக்கியுள்ளனர். இதனையடுத்து வினோத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வினோத் வெள்ளகோவில் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிரகாஷ் என்பவர் இடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை வினோத்துக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக பிரகாஷ் வினோத்தை தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.