Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிலோன் காலனியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீத என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு சங்கீதா தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் வேல்முருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் வேல்முருகனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |