வாலிபரிடம் பணமோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர் நகர் பகுதியில் வாலிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் தொழில் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் நாம் இணைந்து தொழில் செய்வோம் எனவும், மேலும் அதில் ரெட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் வாலிபரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் மர்மநபர் வாலிபரிடம் ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடத்தி அதன்பின் தொழில் செய்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த வாலிபர் மர்ம நபரின் வங்கிக் கணக்கிற்கு இணையதளம் மூலம் ரூ.70,400 பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பின் மர்ம நபர் வாலிபருக்கு எந்த தொடர்பும் கொள்ளவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மர்ம நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த வாலிபர் ஏமாற்றம் அடைந்ததை அறிந்து இதுகுறித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பண மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.