Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெறித்தனமாக குத்திவிட்டு…. தப்பி ஓடிய வாலிபர்கள்…. தொழிலாளிக்கு நடந்த சோகம்….!!

ஆம்பூர் அருகே கட்டிட தொழிலாளி கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சீக்கஜீனை கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் திருமலை கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து அர்ச்சனா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் திருமலை வேலை முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், சேட்டு, சந்தோஷ், மற்றும் சக்திவேல் போன்றோருடன் திருமலை தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த தகராறில் சந்தோஷ் மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்களும் சேர்ந்து திருமலையை கத்தியால் வெறித்தனமாக குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து பார்த்தபோது, திருமலை பலத்த காயத்துடன் மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து திருமலையை ஆம்புலன்ஸ் மூலமாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு, சந்தோஷ் மற்றும் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |