Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வியாபாரத்தில் நஷ்டம் வந்துட்டு…. வாலிபரின் விபரீத முடிவு…. பெரம்பலூரில் சோகம்….!!

 நஷ்டத்தை சந்தித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணைப்பாடி கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாம்பாள் என்ற மனைவி இருக்கின்றார். இதில் செல்வராஜ் மக்காச்சோளம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரத்தில் எதிர்பாராத விதமாக நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த செல்வராஜ் கொள்க்காநத்தத்தில் உள்ள தனது கடையில் வைத்து பூச்சி மருந்து குடித்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்வராஜை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி மீனாம்பாள் கொடுத்த புகாரின்படி மருவத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |