Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனக்கு திருமணம் செஞ்சுவைங்க” வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் அருணாச்சலம்-ராமலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு போஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக போஸ் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 2 மாதமாக போஸ் கிராமத்தில் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில் திருமணம் செய்து வைக்க சொல்லி தனது தாய் ராமலட்சுமியிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணம் செய்து வைப்பதற்கு காலதாமதம் ஆனதால் மனமுடைந்த போஸ் வீட்டில் இருந்த தலை சாயத்தை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |