அனுமதியின்றி பட்டாசு கடந்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் சப் – இன்ஸ்பெக்டரான ராமமூர்த்தி என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் அனுமதியின்றி பட்டாசு கடத்தியது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் பீட்டர் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு பீட்டரிடம் இருந்த 20 கிலோ சரவெடிகள் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பீட்டரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.