வாலிபரை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வினோத்ராஜ் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் இந்த பெண்ணின் உறவினரான ஜான் துரை என்பவர் வினோத் ராஜை கண்டித்துள்ளார். இந்நிலையில் வினோத் ராஜ் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வினோத் ராஜை வழிமறித்த ஜான் துரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வினோத் ராஜின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வினோத் ராஜ் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜான் துரையயை கைது செய்துள்ளனர்.