Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடுக்காடு ஊரில் சுடலமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அவருடைய உறவினரை சாயர்புரம் புதுக்கோட்டை தேனி ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இதனையடுத்து உறவினரை அங்கு இறக்கி விட்டு சுடலைமணி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சுடலைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுடலைமணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிந்தா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |