சில நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமியை தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் வழிபாட்டு தலங்கள் திறப்பு உட்பட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வழிமுறைகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து கோவிலின் நுழைவாயிலில் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்து அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கற்பகவிநாயகர் , முத்துமாரியம்மன் , குன்றகுடி சண்முகநாத பெருமாள், அய்யனார் , சொர்ண காளீஸ்வரர் போன்ற வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. இதனையடுத்து கற்பக விநாயகர் கோவிலில் அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமியை தரிசனம் செய்தனர்.
இதனைதொடர்ந்து பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பூ மாலை சாத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கோவில் நிறுவன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சண்முகநாத பெருமாள் கோவிலில் பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பி சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறந்ததால் பக்தர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.