‘வலிமை’ படத்தின் பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ . ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது . இதுவரை இந்த படத்தின் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிடுமாறு படக்குழுவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்தின் அறிமுக பாடல் குறித்த மாஸ் அப்டேட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து யுவன் ‘இது ஒரு அதிரடியான துள்ளலிசை பாடல். ஒடிசாவில் இருந்து வரவழைக்கப்பட்ட டிரம்ஸ் இசை கலைஞர்கள் இந்த பாடலில் பங்கெடுத்துள்ளனர் . இது ஒரு குத்து பாட்டு’ என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இப்போதே ஆட்டம் போடத் தொடங்கிவிட்டனர் . மேலும் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .