‘வலிமை’ பட இயக்குனரை ‘மாஸ்டர்’ பட இயக்குனர் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படமும் ஹிட் அடித்தது . இதன்பின் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்தது . பொங்கலுக்கு திரையரங்கில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது . தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் . இவரைப்போலவே சிறிய நட்சத்திரங்களை வைத்து ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஹெச். வினோத் .
Good time spent with #Vinoth anna after years! #Brotherhood🤗 pic.twitter.com/ovcKugV0Hu
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 17, 2021
இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது . அதைத்தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனான அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் நடிகர் அஜித்துடன் இணைந்து ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார் . இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குனர் ஹெச் வினோத்தை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . மேலும் அதில் ‘பல வருடங்களுக்குப்பின் வினோத் அண்ணாவை சந்தித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜின் இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.