நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்திற்காக இரண்டு வருடங்களாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்திரைப்படம் கொரானாவின் முதல் அலை பரவுவதற்கு முன்பு தொடங்கப்பட்டது. எனினும் தற்போது வரை வெளியாகாமல் இருக்கிறது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டதில், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒருவழியாக வரும் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.