பிரபல இசையமைப்பாளர் தமன் ‘வலிமை’ படத்தின் ஒரு பாடலை கேட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ . ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகிவரும் வலிமை படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது . ஆனால் இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடாததால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதையடுத்து தயாரிப்பாளர் போனி கபூர் விரைவில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தெரிவித்தார் .
I heard my brother darling @thisisysr #kikichified one song for our #thala in #valimai ❤️🎈it will be surely worth a wait for our #thala for sure 📡🎧🎵⏳ https://t.co/xsks7ZDuqE
— thaman S (@MusicThaman) February 17, 2021
சமீபத்தில் நடிகர் அஜித்தின் ஓபன் பாடலை முடித்திருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்தார் . மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடல் ஒரு குத்துபாடல் என்றும் இதற்காக ஒடிசாவில் இருந்து டிரம்ஸ் கலைஞர்களை அழைத்து வந்து பணியாற்றியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘யுவன் இசையமைத்திருக்கும் வலிமை படத்தின் பாடல் ஒன்றை கேட்டேன் . நிச்சயமாக ‘தல’க்காக காத்திருப்பது வொர்த் தான்’ என்று பதிவிட்டுள்ளார் . தற்போது தமனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .