நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தில் விஜய் டிவி பிரபலம் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் தயாராகி வருகிறது . ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் புகழ் ‘வலிமை’ படத்தில் நடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலம் அடைந்தவர் புகழ். இவர் அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது . இந்த தகவலை அறிந்த பலரும் புகழுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .