வலிமை திரைப்படத்தில் இடம்பெற்ற ரேஸ் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் உடன் இணைந்த அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி திரைப்படமாக தயாராகும் வலிமையில் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் அஜித்குமார். இத்திரைப்படத்தில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. இந்நிலையில் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.