நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவாங்கியிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த ஒரு வருடமாக இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடாததால் ரசிகர்களை அதிருப்தியில் உள்ளனர் . அஜித் ரசிகர்கள் சிலர் முதல்வர் ,பிரதமர், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரிடம் வலிமை அப்டேட் கேட்டு அட்டகாசம் செய்து வந்தனர் . இதனை கண்டிக்கும் வகையில் நடிகர் அஜித் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார் . இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சிவாங்கி ‘எனக்கே தெரியாதுங்க , ஒருவேளை தெரிஞ்சா நான் சொல்றேன்’ என கூறியுள்ளார் .