காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாய் சேகர்’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கியுள்ள ‘வலிமை’ திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது .இப்படத்தை இயக்குனர் H .வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .இதைத்தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘RRR’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக திரை அரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ‘RRR’ படம் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பதாக அறிவித்தது .மேலும் வசூலில் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் வலிமை படத்துடன் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாய் சேகர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.