கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க பொது மக்கள் வழிபட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் திருப்பலி, பிரார்த்தனைகளில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் தஞ்சை சிவகங்கை பூங்கா பகுதியில் கோட்டை சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெறாது என ஆலயத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.