Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பஞ்சர் போட போன வாலிபர்…. முதியவரின் கொடூர செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

வாலிபரின் காதை அறுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மூக்குத்தி வட்டம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் மெக்கானிக் கடையில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பஞ்சர் போட்டுக் கொண்டிருக்கும் போது முனிக்கண்ணு என்பவர் தனது மொபட்டில் விஷ்ணுவை இடிப்பது போல் வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கோபமடைந்த முனிக்கண்ணு தான் வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவின் இடதுபுற காது மற்றும் தாடை, கழுத்துப் பகுதியை அறுத்துள்ளார். இதில் காயமடைந்த விஷ்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனிக்கண்ணுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |