Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தொடர் குற்ற சம்பவங்கள்…. சூப்பிரண்டின் பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட வ.உ.சி. தெருவில் வசிக்கும் சதீஷ் என்பவர் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கலெக்டர் டாக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அதன்படி அவரது பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் சதீஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |