சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியும், விரலூர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவரும் கோயம்புத்தூரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான பஞ்சு தொழிற்சாலையில் ஊழியர்களாக வேலைப்பார்த்து வந்துள்ளனர். அப்போது மாரிமுத்து சிறுமியிடம் அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இது பற்றி சிறுமியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் சிறுமியை தாயார் தனது உறவினரான ஸ்ரீமுஷ்ணம் வீட்டில் தங்க வைத்துள்ளார். இதனையடுத்து சிறுமி அங்கு 15 நாட்கள் தங்கியிருந்த நிலையில் இதை அறிந்த மாரிமுத்து தனது கிராமத்திற்கு அவரை கடத்திச் சென்றுள்ளார். பின்னர் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் உறவினர் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாரிமுத்துவை கைது செய்துள்ளனர். இது குறித்த வழக்கு இம்மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணைகள் முடிவடைந்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறியுள்ளார். இதில் மாரிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பத்து வருடம் சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.