சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரின் 15 வயதுடைய மகளை அதே செங்கல் சூளையில் வேலை பார்க்கும் லட்சுமணன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அவரின் மகளை லட்சுமணன் திருமணம் செய்துள்ளார். அதன்பின் தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கின்ற காரணத்தினால் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அடுத்து அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவருக்கு சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த வழக்கை மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த மகளிர் காவல்துறையினர் லட்சுமணனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.