சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்து இடுப்புக்குக் கீழ் செயலிழந்து படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். அதன்பின் பொருட்கள் விற்பனை செய்ய செல்லும் போது தனியார் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் தங்கள் மகளை தமிழரசன் வீட்டில் விட்டுவிட்டு செல்வது வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் நன்றாக பழகி வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த சிறுமி தமிழரசன் வீட்டுக்கு அடிக்கடி சென்றதால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் சிறுமியிடம் விசாரித்த போது தமிழரசன் தன்னை உதவிக்கு அழைத்ததாகவும் அதனால் தான் உதவி செய்ய சென்ற போது தன்னை பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.