Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் பெற்றோர் ….!!

குடும்ப பிரச்சனையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவினிப்பட்டி கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனியப்பன் அதே பகுதியில் இருக்கும் தனது தோட்டத்தில் வைத்து மதுவில்  விஷம் கலந்து  குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியப்பனின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |