Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபரின் விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் குடும்பத்தை பிரிந்து வாடகை வீட்டில் வசித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தாமோதரன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாமோதரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாமோதரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |