வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காடியார் கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பச்சையப்பன் தனது வீட்டில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ குறித்துள்ளார். அதன்பின் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பச்சையப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பச்சையப்பனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.