Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்ய மறுத்த காதலன்…. இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி…. காவல்நிலையத்தில் பரபரப்பு….!!

வாலிபர் திருமணத்திற்கு மறுத்ததால் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்து நாராயணபுரம் பல்லூர் ரோடு பகுதியில் பட்டதாரியான சத்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெராக்ஸ் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் வேறு கடையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது தன்னுடன் வேலை பார்த்து வந்த சதீஷ் என்பவருடன் பேசிப் பழகி வந்திருக்கிறார். சதீஷ் டிப்ளமோ மெக்கானிக் படித்து முடித்து இருக்கிறார். அதன்பின் இரண்டு பேரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சதீஷ் சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

பின்னர் சத்யாவை விட்டு சதீஷ் விலகத் தொடங்கி பின் அவரை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்து விட்டதாக தெரியவந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த சத்யாவின் பெற்றோர் சதீஷின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கு எந்தவிதமான பலனும் கிடைக்காத காரணத்தினால் சத்யா மகளிர் காவல் நிலையத்தில் சதீஷ் மீது புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்வதற்காக இருதரப்பினரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அப்போது சதீஷ் சத்யாவை திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்ட சத்யா மிகவும் வேதனை அடைந்துள்ளார். அந்நேரம் மன உளைச்சலில் வெளியே ஓடி வந்து காவல்நிலையத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் விரைவாக ஓடிச்சென்று அவரை காப்பாற்றியுள்ளனர். இதன் காரணத்தினால் சதீஷ் மீது மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் தற்கொலைக்கு முயற்சி செய்த சத்யா மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |