புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழையூர் பகுதியில் பிச்சைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபனுக்கும் மன்னார்குடியை சேர்ந்த இலக்கியா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் பார்திபனின் வீட்டில் உள்ளவர்கள் இலக்கியாவை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் மனமுடைந்த பார்த்திபன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்திபனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்கு பிறகு பார்த்திபனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின் பார்த்திபனின் இறுதி சடங்கிற்கு இலக்கியா மற்றும் அவரின் உறவினர்கள் வந்ததால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.