Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நீண்டநாள் தலைவலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடிவேரிமேட்டை பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் சிறுவயது முதலே தலைவலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் கார்த்திக்கின் உடலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் மனமுடைந்த கார்த்திக் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |